லடாக்கில் இந்திய-சீன எல்லையில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒருமாதமாக மோதல் போக்கு நிலவிவருகிறது. இதன் காரணமாக, இருநாடுகளும் தங்களது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்றுக்கு இடையே எழுந்துள்ள இந்த எல்லை விவகாரம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள கார்னிகி என்டவுமென் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் என்ற வெளியுறவுக் கொள்ளை உருவாக்க நிறுவனத்தைச் சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் என்பவர் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்திய-சீன இடையே தற்போது நிலவிவரும் எல்லைப் பிரச்னை, எல்லைப் பகுதிகளில் அமைதியைக் காக்கும் இந்தியாவின் முயற்சிக்கு, சீனா சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.