உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இழக்கச் செய்துள்ளது. இந்நோயின் பிறப்பிடமான சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் மட்டும் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோயின் தீவிரத் தன்மை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. சர்வதேச நாடுகளுக்கும் இந்நோய் பரவிவரும் நிலையில் சீனாவுடனான விமான போக்குவரத்துக்குத் தற்காலிகத் தடையை சர்வதேச நாடுகள் விதித்துள்ளன.
வூஹான் பகுதியில் வசிக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் மீட்டுள்ள இந்திய அரசு, அங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ முன்வருவதாக சீனாவுக்கு உறுதியளித்தது.