இந்தியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ பயணம் மேற்கொண்டுவருகிறார். வியட்நாம் சென்ற பாம்பியோ, எதிர்காலத்தில் மதச் சுதந்திரத்திற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பெரும் அச்சுறுத்தலாக உருவாகும் எனக் குற்றஞ்சாட்டினார்.
கொள்கை வேறுபாட்டினால் பொய்களைப் பரப்பும் அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு - சீனா குற்றச்சாட்டு
பெய்ஜிங்: கொள்கை வேறுபாட்டினால் சீனா குறித்த பொய்ப் பரப்புரையினை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கொண்டுவருகிறார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்குப் பதிலடி தரும்விதமாக பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, "கொள்கை வேறுபாட்டினால் சீனா குறித்த பொய்ப் பரப்புரையினை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கொண்டுவருகிறார். அமெரிக்காவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க நாங்கள் விரும்பவில்லை.
ஆனால், அமெரிக்காவோ சீனாவில் கடும் குற்றத்தை மேற்கொண்டவர்களுக்குப் புகலிடம் அளிக்கிறது. சீனாவிற்கு வந்து சரணடைய விரும்புவோருக்குத் தடையாக உள்ளது. சட்டத்திற்கு எதிராகவும் சீனாவிற்கு எதிராகவும் அமெரிக்கா செயல்படுகிறது" என்றார்.