சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு அரசு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
மீண்டும் தலைதூக்கும் கரோனா; எதிராகக் களமிறங்கும் சீனா - சிஞ்சியாங் பிராந்தியம்
பெய்ஜிங்: இரண்டாம் கட்டமாக சீனாவில் பரவிவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது.
china-battles-new-outbreak-in-far-west-xinjiang
இதற்கிடையில் சிஞ்சியாங் பிராந்தியத்தில் ஒருவர் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 16 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. உரும்கியில் உள்ள சுரங்கப் பாதைகள், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.