சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவின் வுஹான் நகரம் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்க, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் சீன சென்று வருபவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 304 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை), ஒரே நாளில் மட்டும் 45 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.