சீனாவில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸை தடுக்க அந்நாட்டு நிதி அமைச்சகம் 4.4 பில்லியன் யுவானை (சுமார் 640 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கியுள்ளது.
வைரஸை தடுக்க 640 மில்லியன் டாலர் ஒதுக்கியது சீனா! - வைரஸை தடுக்க நிதி ஒதுக்கிய சீனா
பெய்ஜிங்: நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்ற கொரோனா வைரஸை தடுக்க 640 மில்லியன் அமெரிக்க டாலரை சீனா ஒதுக்கியுள்ளது.
ministry of finance China allocates fund for virus prevention
ஒதுக்கப்பட்ட நிதியில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மத்திய சீன ஹூபே மாகாணத்திற்கு 500 மில்லியன் யுவான் நிதி உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒரு பில்லியன் யுவானை ஹூபே மாகாணத்திற்கு நிதி அமைச்சகம் ஒதுக்கியது. தற்சமயம் 132 பேரை இந்த வைரஸ் கொன்றுள்ளது. இதுவரை 10க்கும் மேலான நாடுகள் வைரஸ் பாதிப்பு வழக்குகளை உறுதிசெய்துள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்க - சீனா உறவும் வளரும் நாடுகளும்!