அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், சீனா ராணுவத்துடன் தொடர்புடைய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் நுழைவு இசைவுகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இன ரீதியாகப் பாகுபாட்டைக் காட்டும் வகையில் அமெரிக்காவின் நடவடிக்கை இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.