ஹீரட் மாகாணத்தின் ஒபா மாவட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் இன்று நடத்தப்பட்டது. இதில், ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்; குழந்தை உட்பட இருவர் பலி! - two killed
காபூல்: அப்கானிஸ்தானில் ஹீரட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் உடல்சிதறி பலியான சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
குழந்தை உட்பட இருவர் பலி
இதன் காரணமான ஹீரட் மாகாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அமெரிக்க - தலிபான் பிரதிநிதிகளிடையே அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.