தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மெர்ஸ் கரோனா வைரஸ் நோய்க்கான ஆன்டிபாடி கண்டுபிடிப்பு

மெர்ஸ் கரோனா வைரஸ் நோய்க்கான ஆன்டிபாடியை உயிரி தொழில்நுட்ப நிறுவனமான செல்ட்ரியன் கண்டுபிடித்துள்ளது.

செல்ட்ரியன்
செல்ட்ரியன்

By

Published : May 15, 2020, 12:07 PM IST

தென் கொரியாவைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான செல்ட்ரியன், மெர்ஸ் எனப்படும மத்திய கிழக்கு சுவாச நோய் கரோனா வைரஸ் நோய்க்கான ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளது. தொற்று நோயை கட்டுப்படுத்தி சிகிச்சை அளிப்பதில் இந்நிறுவனம் தற்போது கவனம் செலுத்திவருகிறது. CT-P38 என ஆன்டிபாடிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, 3.7 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளது. இதில், 2.2 பில்லியன் டாலர்களை அரசு ஒதுக்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு வரை, செல்ட்ரியன் நிறுவனம் கொரியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படவுள்ளது. CT-P38 என்ற ஆன்டிபாடியை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காப்புரிமையை இந்நிறுவனம் பெற்றது.

மற்ற ஆன்டிபாடிகளை காட்டிலும் CT-P38 என்ற ஆன்டிபாடி சிறப்பான முறையில் செயல்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அபாயங்களை குறைக்கிறது. 2018ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், ஐ.எஸ்.ஐ.ஆர்.வி என்ற கூட்டமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரியவந்தது. ஆன்டிபாடிக்கான செலவு குறித்து அரசு மற்றும் மற்ற பங்குதாரர்களுடன் செல்ட்ரியன் நிறுவனம் ஆலோசனை நடத்தவுள்ளது. உலகின் 27 நாடுகளில் மெர்ஸ் நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தீவிரமடையும் கரோனா தொற்று: குஜராத்தை நெருங்கும் தமிழ்நாடு

ABOUT THE AUTHOR

...view details