இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், பொது இடங்களில் ஆங்காங்கே உள்ள வெடிகுண்டுகளை ராணுவத்தினர் தொடர்ந்து கைப்பற்றப்பட்டன.
கொழும்புவில் தொடர்ந்து 2 வது வாரமாக ஞாயிறு பிரார்த்தனை ரத்து! - Colombo
கொழும்பு: இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரோலியாக தொடர்ந்து இரண்டாவது வாரமாக தேவாலயங்களில் ஞாயிறு பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இ்ந்த சம்பவத்திற்கு உதவியதாக கருதப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் அவசரகால சட்டத்தின் கீழ் அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தடை விதித்தார். இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய சிறிசேன, உரிய முறையில் அதனை பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களு்ககு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தலைநகர் கொழும்புவிலுள்ள தேவாலயங்களில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஞாயிறு பிரார்த்தனை ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.