பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். அவர் கில்ஜித் - பலுதிஸ்தானில் வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு ஏழு நாள்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
”அறையிலும் கழிப்பறையிலும் கேமராக்கள் இருந்தன” - சிறை வாசம் குறித்து பேசிய மரியம் நவாஸ்! - பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
கராச்சி : சிறையில் தனது அறையிலும் கழிப்பறையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தான் இரண்டு முறை சிறைக்குச் சென்ற சமயங்களிலும் தனது அறையிலும், கழிப்பறையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன என்ற முக்கியக் குற்றச்சாட்டை அரசுக்கு எதிராக மரியம் நவாஸ் முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் இரண்டு முறை சிறைக்குச் சென்றிருக்கிறேன். பெண்கள் சிறையில் நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பது குறித்துப் பேசினால் அவர்களின் முகங்களை வெளியில் காட்டும் தைரியத்தையே அவர்கள் இழந்து விடுவார்கள். எனது அறையிலும் கழிப்பறையிலும் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்” எனக் கூறியுள்ளார்.