தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை - ரஷ்யா - CAA is democratic says Russia

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்பதால் அதுகுறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு துணைத் தூதர் ரோமன் தெரிவித்துள்ளார்.

RUSSIA caa, ரஷ்யா குடியுரிமை திருத்தச் சட்டம்
RUSSIA caa

By

Published : Dec 23, 2019, 8:44 PM IST

சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இந்த சட்டம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பாபுஸ்கின், "இது ( குடியுரிமை திருத்தச் சட்டம்) இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்பதால், இதுகுறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்னைகள் இருந்தால் அவை பேசித் தீர்க்கப்பட வேண்டும்" என்றார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு ஆளாகி 14 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருவதே இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சாராம்சமாகும்.

ஒருபுறம், இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி டெல்லி, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் குடியுரிமை சட்டம் தங்களது அடையாத்தை நீர்த்துப்போகச் செய்யும் எனக் கூறி வட கிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாமில் மக்கள் போர் கொடித் தூக்கியுள்ளனர்.

இதையும் படிங்க : இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புத் தலைவராக சங்கீதா ரெட்டி நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details