தமிழ்நாடு

tamil nadu

ஆஸ்திரேலியாவில் மீண்டும் பரவும் காட்டுத்தீ!

By

Published : Dec 1, 2020, 10:33 PM IST

சென்ற ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வந்த நிலையில், தற்போது அந்நாட்டில் நிலவும் வெப்பக்காற்று, கடும் வெப்பநிலை ஆகியவற்றின் காரணமாக மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் ப்ரேசர் தீவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு வசித்து வரும் மக்களும், அப்பகுதிக்கு வருகை தந்த வண்ணம் உள்ள சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடியும் முடியாத நிலையில், காட்டுத்தீ பெருமளவில் அந்நாட்டில் மீண்டும் பரவ வாய்ய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கோடைக் காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், இன்று நிலவிய கடும் வெப்ப நிலை, சூடான காற்று ஆகியவற்றின் காரணமாக மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் ’பிளாக் சம்மர்’ என்று அழைக்கப்படும் சென்ற ஆண்டு கோடைக் காலத்தின்போது 15 லட்சம் ஹெக்டேர் காடுகள் தீக்கிரையாகின. சென்ற ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி, இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வந்தது. 9 தீயணைப்பு வீரர்கள் உள்பட இதில் மொத்தம் 33 பேர் உயிரிழந்தனர். மூன்றாயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பாலாகின. கணக்கிலடங்காத பிற உயிரினங்கள் பலியாகின.

இந்நிலையில் தற்போது அங்கு மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் முக்கிய மாகாணங்களான குயின்ஸ் லேண்ட், நியூ சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் உச்சபட்ச வெப்ப நிலை நிலவி வரும் நிலையில், நேற்று காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்நாட்டின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் கடும் வெப்பக்காற்று வரும் நாள்களில் வீசும் எனவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details