தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆஸ்திரேலியாவில் கட்டுக்குள் அடங்காத காட்டுத்தீ: பொதுமக்களுக்கு எச்சரிக்கை! - மக்களுக்கு எச்சரிக்கை

கில்டர்டன்: ஆஸ்திரேலியாவில் கட்டுக்குள் அடங்காத காட்டுத்தீயால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கட்டுக்குள் அடங்காத காட்டுத்தீ: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியாவில் கட்டுக்குள் அடங்காத காட்டுத்தீ: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

By

Published : Jan 5, 2021, 5:58 PM IST

இது குறித்து ஆஸ்திரேலியாவின் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் ஆணையம் இன்று (ஜன. 05) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “ஆஸ்திரேலியாவின் வட பெர்த்தில் உள்ள காட்டுப்பகுதியில் தீ வேகமாகப் பரவிவருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து ஓஷன் ஃபார்ம்ஸ் பகுதியிலிருந்து கில்டர்டனுக்கு இடமாற்றமான ரேச்சல் கூறுகையில், “இந்தத் தீ இவ்வளவு வேகமாகப் பரவும் எனக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை” என்றார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் வட பெர்த்தில் உள்ள பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனா 2.0: பிரிட்டனில் மீண்டும் முழு ஊரடங்கு!

ABOUT THE AUTHOR

...view details