Blue sapphire stone: கொழும்பு:மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் இரத்தினபுரியில் மிகவும் அரிதான மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல் ஆசியாவின் ராணி என அழைக்கப்படுகிறது.
இலங்கையின் தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண அமைப்பின் சார்பில் இந்த கல் விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக இலங்கை அரசு சார்பில் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.