ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காவல்துறை வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு அலுவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்தார். தொடர்ச்சியாக காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் நடைபெறும் குண்டுவெடிப்பு, ராக்கெட் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்திற்கும் தலிபானுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தபோதிலும், அங்கு, பாதுகாப்பு படையினர், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகளவில் இலக்கு வைக்கப்படுகின்றனர்.