தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Afghanistan bomb blast - வகுப்பறையில் குண்டு வெடிப்பு: 23 பேர் காயம்! - Afghanistan வகுப்பறைக்குள் குண்டு வெடிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானின் (Afghanistan bomb blast) காஸ்னி பல்கலைக்கழக வகுப்பறையில் நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் காயமடைந்தனர்.

Afghanistan ghazni university blast

By

Published : Oct 8, 2019, 9:27 PM IST

ஆப்கானிஸ்தான் (Afghanistan bomb blast) நாட்டின் காஸ்னி நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது காஸ்னி பல்கலைக்கழகம்.

இந்த பல்கலைக்கழகத்தின் வகுப்பறை ஒன்றில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில், 18 மாணவிகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாக காஸ்னி ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

காஸ்னி

இந்தத் தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. காஸ்னி மாகாணத்தில் உள்ள அரசு பாதுகாப்புப் படையினர் மீது தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் வாசிங்க: 'உருத்தெரியாமல் அழித்துவிடுவோம்!' - துருக்கியை மிரட்டும் ட்ரம்ப்!

ABOUT THE AUTHOR

...view details