அமெரிக்காவிடம் பாகிஸ்தான் வாங்கிய எஃப் 16 ரக போர் விமானத்தை பிற நாட்டுடன் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற எஃப் 16 ரக பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க பத்திரிகை ஒன்று எஃப் 16 ரக விமானம் தொடர்பாக கட்டுரை வெளியிட்டுள்ளது.
‘போர் வெறியை தூண்டிவிட்டு ஆட்சி அமைக்க பாஜக முயற்சி!’ - பாக்., பிரதமர் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: போர் வெறியைத் தூண்டிவிட்டு பாஜக தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
இது தொடர்பாக, ட்விட்டரில் பதவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், "உண்மை எப்போதும் வெல்லும். இது சிறந்த கொள்கை. போர் புரியும் வெறியை தூண்டிவிட்டு பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. எஃப் 16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகக் கூறுவது முற்றிலும் பொய். அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பாகிஸ்தானிலிருந்து எந்தவொரு எஃப் 16 ரக விமானமும் இந்திய எல்லைக்குள் செல்லவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.