தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காவல் படையில் சேர்ந்த 6 நாய்கள் - குளோனிங் முறையில் தயாரித்து அசத்திய சீனர்கள்!

பெய்ஜிங்: குளோனிங் முறையில் தயாரிக்கப்பட்ட 6 நாய்களை சீனக் காவல் துறையினர் அதிகாரப் பூர்வமாக பாதுகாப்புப் படையில் சேர்த்துள்ளனர்.

6 நாய்கள்

By

Published : Nov 25, 2019, 3:22 PM IST

உலகில் சாத்தியம் இல்லாததைச் சாத்தியம் ஆக்குவதில் சீனர்கள் வல்லவர்கள். அதைப் போல், மற்றொரு சாதனை முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளனர். அப்படி குளோனிங் முறையில் தயாரிக்கப்பட்ட ஆறு நாய்களை, சீன பாதுகாப்புப் படையில் சேர்த்துள்ளனர்.

நாய்களுக்குப் பளபளப்பான புதிய பேட்ஜ்கள், சீருடைகள், காலர்கள் என அளித்து சீனாவின் காவல் படை கவுரவம் அளித்துள்ளது. இந்த நாய்களைத் தனியார் செல்லப்பிராணி குளோனிங் நிறுவனத்துடன் சேர்ந்து, பெய்ஜிங் முனிசிபல் பீரோ ஆஃப் பப்ளிக் செக்யூரிட்டி அமைப்பினர் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை அலுவலர் மா ஜின்லே கூறுகையில், " இரண்டு நாய்களின் டிஎன்ஏவை வைத்துத் தான் இந்த நாய்கள் உருவாக்கப்பட்டன. தற்போது ஆறு நாய்களின் டிஎன்ஏ 99 விழுக்காடு ஒன்றாக இருக்கிறது. சிறப்பான போலீஸ் நாய்களுக்கு வயதாகும்போது, சில திறன்களை இழக்கின்றன. எனவே, அதைச் சரிசெய்யவே இந்த முயற்சியில் ஈடுபட்டோம். நான்கு மாதங்கள் வயதாகும் இந்த நாய்களுக்கு, ஆறு மாதங்களிலிருக்கும் வளர்ச்சிகள், திறமைகள் காணப்படுகின்றன. தற்போது, தீவிரக் கண்காணிப்பில் குளோனிங் நாய்கள் வைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: கென்ய நிலச்சரிவில் 60 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details