வங்கதேசத்தில் படித்த 19 வயது மாணவியான நுஸ்ரத் ஜஹான் ரஃபி தனது தலைமை ஆசிரியருக்கு எதிராக அளித்த பாலியல் புகாரைத் திரும்பப் பெற மறுத்ததால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 16 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹவீச் அஹமத் கூறுகையில், "வங்கதேசத்தில் கொலை செய்துவிட்டு ஒருவரால் தப்பிவிட முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு காட்டுகிறது" என்று கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம், 19 வயது நுஸ்ரத் ஜஹான் ரஃபிக்கு அவரது தலைமை ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துவந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.