இந்தியாவில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்தச் சூழலில், இந்திய எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் அசம்பாவிதங்களைத்தடுக்கும்விதமாக அப்பகுதிகளில் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளையும் துண்டிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டது.
அதனடிப்படையில், எல்லையையொட்டி 32 மாவட்டங்களில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்களின் சேவை கடந்த திங்கள்கிழமை அன்று தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.