வங்கதேசத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜாய்பூர்ஹட் மாவட்டத்தில் வசித்து வருபவர் பப்லு மொண்டல். இவருடைய மனைவி தயாரித்த உணவினை உண்ணும்போது, அதில் முடி கிடந்துள்ளது. இதனால் கோபமடைந்த மொண்டல், ப்ளேடால் மனைவிக்கு மொட்டை போட்டுள்ளார்.
இதனையறிந்த அக்கம்பகக்த்தினர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், பப்லு மொண்டலை கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் அலுவலர் ஷாரியர் கான் கூறுகையில், அவருடைய காலை உணவில் முடி கிடந்ததால் கோபமடைந்து மனைவிக்கு மொட்டை போட்டுள்ளார். பப்லு மீது காவல்துறையினர் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்திய பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் 14 ஆண்டுகள் வரை பப்லுவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய சமூக செயற்பாட்டாளர்கள், வங்கதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான கணக்கெடுப்பில், 630 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர். சரியாக பார்த்தால் ஒரு நாளைக்கு 3 பேர் பாலியல் வண்புணர்வுக்கு ஆளாகி வருகின்றனர் என கவலை தெரிவித்தனர்.
இதையும் படிக்கலாமே: அரசு அலுவலர்களைக் காலணிகளால் தாக்கிய பெண்கள்!