வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில்வர்த்தகம் நடைபெறும் முக்கியப் பகுதியில்22 அடுக்கு மாடி அலுவகம் ஒன்று அமைந்துள்ளது.
22 அடுக்கு மாடி கட்டடத்தில் தீவிபத்து - high-rise building in Dhaka
டாக்கா: வங்கதேசத்தில் 22 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் இதுவரை 19 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டடத்தின் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bangladesh fire
இந்நிலையில் நேற்று மதியம் அந்த கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்களை உயிருடன் மீட்பதற்காக தீயணைப்பு படையினர் போராடிவருகின்றனர். வேகமாக இந்த தீயானது மேல் நோக்கி பரவியதால் மேல் தளங்களில் இருந்தவர்களால் தப்பிக்க முடியவில்லை.
இதனிடையில் ஹெலிகாப்டர் வழியாக நீர் பாய்ச்சப்பட்டு ஒரு சில தளங்களில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர்.