வங்கதேச தலைநகர் டாக்காவின் நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆறு அடுக்கு தொழிற்சாலையில் நேற்றிரவு(ஜூலை.9) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 52 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் இன்று பிற்பகலில் மீக்கப்பட்டன. 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள், 18 வாகனங்கள் மூலம் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 24 மணி நேரமாக தீ கட்டுக்கடங்காமல் எரிவாதால், அருகிலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுவருகின்றனர்.