புல்புல் புயலானது சனிக்கிழமை (நவம்பர் 9) இரவு 8.30 - 11.30 மணியளவில் சுந்தர்பன் வனப்பகுதிக்கு அருகிலுள்ள மேற்குவங்க கடற்கரை அருகே கரையைக் கடந்தது. இந்தப் பகுதி வங்கதேசத்தை ஒட்டியிருப்பதால் அங்குள்ள கடற்கரை மாவட்டங்களுக்கும் இரண்டு துறைமுகங்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புல்புல் புயல் காரணமாக சுந்தர்பன் காடுகள் அருகேயுள்ள தென்மேற்கு குல்னா பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற வங்கதேச அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும்,இந்தப் புயல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 55,000 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.