தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கப்பலில் தவித்த 396 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு, 24 பேர் உயிரிழப்பு! - Bangladesh

நைப்பியிதோ: நடுக்கடலில் உணவின்றித் தவித்தவந்த 396 ரோஹிங்கியா அகதிகளை, வங்கதேச கப்பல் படையினர் மீட்டுள்ளனர்.

்ே
ே்ே

By

Published : Apr 16, 2020, 1:33 PM IST

ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் பலர் இணைந்து கப்பலில் மலேசியா நாட்டிற்குச் சென்றனர். ஆனால், மலேசியாவை சென்றடைய முடியாமல் ரோஹிங்கியா மக்கள் பயணித்த கப்பல் வங்கதேசத்தின் நடுக்கடலில் சிக்கித் தவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது.

சுமார், இரண்டரை மாதமாக உணவின்றித் தவித்துவந்த மக்கள் குறித்த தகவலை அறிந்த வங்கதேச கப்பல் படையினர், அனைவரையும் மீட்கும் முயற்சியில் களமிறங்கினர்.

இது குறித்து வங்கதேச கப்பல் படையினர் கூறுகையில், "மூன்று நாள்கள் தேடிய எங்களுக்கு கடைசியில்தான் கப்பல் இருப்பிடம் குறித்த தகவல் கிடைத்தது. பின்னர், உடனடியாக நள்ளிரவே சுமார் 396 ரோஹிங்கியா அகதிகளை மீட்டோம். அதில், 24 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்" என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர்.

மேலும், கப்பலில் பயணித்த அகதி ஒருவர் கூறுகையில், "கரோனா அச்சத்தில் எங்களை மலேசியா நாட்டுக்குள் அனுமதியளிக்கவில்லை. சுமார் இரண்டு மாதங்கள் கடலில் தவித்த காரணத்தினால், 24 நபர்கள் பசி கொடுமையிலே உயிரிழந்தனர்" என அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனாவைக் கடத்தும் பூனைகள் - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

ABOUT THE AUTHOR

...view details