தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'இந்திய எல்லைக்குள் சட்டவிரோத குடியேற்றங்கள் நடைபெறவில்லை'- வங்கதேசம் - சட்டவிரோத குடியேற்றங்கள்

இந்திய எல்லைக்குள் வங்கதேசத்தினரின் சட்டவிரோத குடியேற்றங்கள் நடைபெறவில்லை, இருப்பினும் எல்லை முழுவதும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று வங்கதேச எல்லை பாதுகாப்பு படை கூறியுள்ளது.

Bangladesh claims no illegal immigration into India, latest news on Border Security Force raises concern over smuggling Border Guard Bangladesh சட்டவிரோத குடியேற்றங்கள் முகம்மது ஷாபனூல் இஸ்லாம்
Bangladesh claims no illegal immigration into India, latest news on Border Security Force raises concern over smuggling Border Guard Bangladesh சட்டவிரோத குடியேற்றங்கள் முகம்மது ஷாபனூல் இஸ்லாம்

By

Published : Dec 25, 2020, 6:35 PM IST

கௌகாத்தி: அஸ்ஸாம் தலைநகர் கௌகாத்தியில் வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை பொது இயக்குனர் முகம்மது ஷாபனூல் இஸ்லாம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கதேசத்தினர் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியதாக 3,204 வங்கதேசத்தினர் எல்லை பாதுகாப்பு படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோத குடியேற்றங்கள் நடைபெறவில்லை. சிலர், வேலை பெறும் நோக்கத்தில் இந்தியாவுக்கு வருகின்றனர். குடும்பம் ஒரு புறமும், அவர்கள் மறுபுறமும் இருக்கின்றனர்.

பண்டிகை காலத்தில் கூட உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க: பிஎம் கிஷான் திட்டத்தை தடுப்பது ஏன்? மம்தா பானர்ஜிக்கு நரேந்திர சிங் தோமர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details