வங்கதேசத்தில் அண்மையில் நடந்த தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளுக்கு பின்னர் நாடு தழுவிய எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அதிபர் எம்.டி.அப்துல் ஹமீத் செவ்வாய்க்கிழமை பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை விதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.
முன்னதாக பாலியல் வன்கொடுமை அதிகபட்ச தண்டனையை ஆயுள் தண்டனையிலிருந்து மரணத்திற்கு அதிகரிக்க திங்களன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
சட்ட அமைச்சகம் ஒரு அறிக்கையில், "வாழ்நாள் கடுமையான சிறைத்தண்டனை" என்பதற்கு பதிலாக "மரண தண்டனை" என்பது பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகபட்ச தண்டனையாகும்.
பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் முயற்சியில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரணதண்டனையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது என்று பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார்.
"ஒரு மனிதன் பாலியல் வன்புணர்வின்போது, ஒரு மிருகமாக மாறுகிறான். இதனால் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே நாங்கள் சட்டத்தை திருத்தியுள்ளோம்" என்று செவ்வாயன்று இங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.
ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் வங்கதேசத்தில் குறைந்தது 889 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.