கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான மறுபிரவேசத்தில், ஜூன் மாதத்தில் சீனா ஈரானில் இருந்து ஒரு நாளைக்கு 120,000 பீப்பாய்கள் எண்ணெய் இறக்குமதி செய்தது.
ஈரானின் அணு ஆயுத கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இதனிடையே, கடந்த ஆண்டு ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. மேலும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. சர்வதேச எண்ணெய் நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருந்தது.
இருப்பினும், சீனா ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
கரோனா நெருக்கடி காலக்கட்டத்திற்கு பின்பான கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெயை சீன இறக்குமதி செய்துள்ளதாக புலனாய்வு செய்தி நிறுவனமான கிப்லெர் ரேடியோ ஃபர்டா கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை சராசரியாக 77,000 பிபிடி கச்சா எண்ணெய்யை ஈரானில் இருந்து சீனா இறக்குமதி செய்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், "சுங்க தரவுகளின்படி, ஈரானில் இருந்து சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிகள் பெருமளவு அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.
இது ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு முந்தைய அளவை விட பன்மடங்கு அதிகமாகும்.
மேலும், சீனாவிற்கு செல்லும் ஈரானிய எண்ணெய் பேரல்கள் குறித்த செய்தியை மறைக்க 'இந்தோனேசிய எண்ணெய்' என்று பெயரிடப்பட்ட தொகுப்புகளில் கரீபியன் தீவைச் சேர்ந்த செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் அரசின் கொடியை ஏற்றிய எண்ணெய் டேங்கர்களில் டேங்கர் ஈரானின் எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
அதேபோல, பல்வேறு நாடுகளின் கொடிகளின் கீழ் 15 டேங்கர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் அறிக்கையை விட சீனா உண்மையில் ஈரானிடமிருந்து அதிக எண்ணெயைப் பெறுகிறது" என கூறுகிறது.
ஈரான் மீதான பொருளாதாரத் தடை காரணமாக, அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்ட இந்திய அரசு, அதற்குப் பதிலாக அமெரிக்காவிடம் வாங்கிவருவது கவனிக்கத்தக்கது.