ஹாலிவுட்டின் சூப்பர் ஹூரோக்கள் நடித்துள்ள 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம் ஏப்ரல் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. தமிழ்நாட்டில் இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று பேட்ட, விஸ்வாசம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. மேலும், அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசிப்படம் என்பதால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இரண்டு சூப்பர் ஹீரோக்கள் இப்படத்தில் இறந்துவிடுகின்றனர். இந்தப் படத்தை பார்த்த ’மார்வெல்’ ரசிகர்கள் படம் முடிந்து வெளியே வரும்பொழுது கண்ணீருடன் இருவர் இறந்த சோகம் தாங்காமல் மன இறுக்கத்துடன் வீட்டிற்கு செல்கின்றனர்.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த நிங்போ என்ற இளம்பெண் சமீபத்தில் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தை பார்க்க தனது தோழியுடன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். இப்படத்தில், அயர்ன் மேன், லூசியா ஆகிய இருவரும் இறந்துவிடுவதைக் கண்டு தேம்பி தேம்பி அழுதுள்ளார். அழுகையை நிறுத்தாமல் தொடர்ச்சியாக தேம்பி அழுத நிங்போ திடீரென மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்தார்.