ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியைச் சேர்ந்த அலெக் சிக்லே(29), வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் உள்ள இரண்டாம் கிம் சாங் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித்துறையில் பயின்று வருகிறார். கடந்த ஒரு மாதமாக அவரிடமிருந்து எவ்வித தகவலும் கிடைவில்லை என குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வட கொரியா குறித்த தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வட கொரியா பற்றிய செய்திகளை வெளியிடும் என் கே நியூஸ் என்ற அமெரிக்காவின் செய்தி இணையதளத்திற்கும், பிற ஊடகங்களுக்கு வழங்கியதாக அவர் மீது அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் குற்றஞ்சாட்டியது. இதனையடுத்து, ஜூன் 25 ஆம் தேதி அலெக் சிக்லே அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், கைது செய்யப்பட்ட மாணவரை வட கொரியா விடுதலை செய்து விட்டதாகவும், இதற்கு உதவிய சுவீடன் நாட்டு அலுவலர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
'நான் உளவாளி அல்ல' வட கொரியாவில் கைதான ஆஸ்திரேலிய மாணவர் விளக்கம்!
டோக்கியோ: தான் உளவாளி அல்ல என்று வட கொரியாவில் கைது செய்யப்பட்டு விடுதலையான ஆஸ்திரேலிய மாணவர் அலெக் சிக்லே விளக்கம் அளித்துள்ளார்.
இதனையடுத்து, 4 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட அன்றே ஜப்பானுக்கு அலெக் சிக்லே அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர், மனைவியுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே, 'வட கொரியா நண்பர்களை விட்டு வந்துள்ளது மிகவும் மனவேதனை அளிக்கிறது' எனக் கூறினார். மேலும், தான் ஒரு உளவாளி என்ற குற்றச்சாட்டை புறக்கணித்த அவர், வட கொரியாவில் தன் ஆராய்ச்சி படிப்பை மீண்டும் தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
இத்தகைய சூழலில், அலெக் சிக்லேவை வட கொரியாவுக்கு அனுப்பி வைத்த 'டோங்கில டுர்ஸ்' நிறுவனம், நான்கு பேரின் பயணத் திட்டத்தை ரத்து செய்துள்ளது.