ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்றுவரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க, ரஷ்யா அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.
இந்திக்கு மாறிய ஆஸ்திரேலிய பிரதமர்! வைரல் ட்வீட் - ஜி-20 மாநாடு
ஒசாகா: பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன், இந்தி வாக்கியத்தோடு அதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
modi
அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘எவ்ளோ நல்லா இருங்கீங்க மோடி?’ என்ற வாக்கியத்தை இந்தியில் பதிவிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. குறிப்பாக, இதனைப் பார்த்த பாஜக ஆதரவாளர்கள் சிலர், மோடியுடன் பழகினால் ஆஸ்திரேலிய பிரதமர் கூட இந்தியில் பேசுவார் என்று பதிவிட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த ட்வீட்டிற்கு ரீட்வீட் செய்த மோடி, நமது இருநாட்டு உறவையும் பார்த்து உற்சாகமடைவதாக பதிலளித்துள்ளார்.
Last Updated : Jun 29, 2019, 12:37 PM IST