தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

லட்சக்கணக்கான பூனைகளை காவு கொடுக்கும் ஆஸ்திரேலியா! - பூனைகளை கொல்ல திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு

2020ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பூனைகளை விஷம் வைத்துக் கொல்ல ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பூனை

By

Published : Apr 28, 2019, 12:49 PM IST

ஆஸ்திரேலியாவில் உள்ள அழிந்துவரும் 34 வகை உயிரினங்களில் 22 வகை உயிரினங்களுக்கு பூனைகளால் பாதுகாப்பற்றச் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜோஷ் ஃபிடென்பெர்க் தெரிவித்திருந்தார்.

இதனால், ஆஸ்திரேலிய அரசு 2015ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பூனைகளைக் கொல்லத் திட்டமிட்டிருந்தது. இதன் முதலாம் ஆண்டில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பூனைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப் பூனைகள் அலுவலர்களால் பிடிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது, உயிருடன் உள்ள பூனைகளை கோழி, கங்காரு உள்ளிட்ட இறைச்சிகளில் விஷம் கலந்து விமானம் மூலம் போடப்படும் எனவும், இதனைப் பூனைகள் உண்டால் 15 நிமிடங்களில் உயிரிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details