உலகெங்கும் பல லட்சம் பேரைக் கொன்றுகுவித்துள்ள கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்களின் கரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும் சர்வதேச நாடுகள் அந்தத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த தயக்கம் காட்டிவருகின்றன.
மேலும், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் தங்களின் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு அந்நாட்டு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்ததாலேயே மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.