ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்பானது தலைநகரம் கான்பெராவிலும் பரவி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று காலை அப்பகுதியில் சூழ்ந்த புகைமூட்டத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் தென் வேல்ஸ், விக்டோரியா, கங்காரு உள்ளிட்ட தென் ஆஸ்திரேலிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவின்பேரில்,3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்க 20 மில்லியன் டாலர் செலவில் நான்கு அதிநவீன தீயணைப்பு விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.