தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வெளிநாட்டுப் பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்தும் ஆஸ்திரேலியா - Australian PM scott morrison

ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் அங்கு சென்றுள்ள வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Australia
Australia

By

Published : Mar 15, 2020, 1:26 PM IST

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், அது பரவுவதைத் தடுக்க ஆஸ்திரேலியா புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. கொரோனா வைரஸ் பொதுவாக வெளிநாடுகளிலிருந்து செல்லும் பயணிகள் மூலமாகவே பரவிவரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தீவிரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து அங்கு செல்லும் பயணிகள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டில் வைக்கப்படுவார்கள் என அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மக்களின் அன்றாட பழக்கவழக்கத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும், தீவுநாடான ஆஸ்திரேலியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து செல்லும் கப்பல்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் எனவும் அந்நாடு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 262 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:உலகில் ஒன்றரை லட்சம் பேரை பாதித்த கொரோனா

ABOUT THE AUTHOR

...view details