உலகின் மிகச்சிறிய கண்டமான ஆஸ்திரேலியா, கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முக்கிய யுக்தியாக புதிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. அந்நாட்டின் சுகாதாரத் தொழிலாளர்களைக் கொண்டு புறநகர்ப் பகுதிகளில் வீடுதோறும் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
அந்நாட்டில் உள்ள பத்து முக்கியப் புறநகர்ப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் பரிசோதனை மேற்கொள்வதை இலக்காக வைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு, தேவைப்பட்டால் ராணுவத்தையும் இந்த நடவடிக்கையில் களமிறக்க முடிவுசெய்துள்ளது.