இந்திய மக்களின் பாதுகாப்பு கருதி, 59 சீனச் செயலிகளுக்கு இந்தியா முழுவதும் தடைவிதிக்கப்பட்டது. முக்கியமாக டிக்டாக் செயலியின் தடை நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் அச்செயலியைத் தடைசெய்யுமாறு ஆங்காங்கே குரல்கள் வலுத்துள்ளன.
சமீபத்தில், லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் மோலன், டிக்டாக் செயலியின் மூலம் பயனர்களின் தரவுகளை சீன அரசு சேகரித்துவருகிறது என்றார். அதேபோல் தொழிலாளர் கட்சியின் ஜென்னி, டிக்டாக் பிரதிநிதிகள் வெளிநாட்டு தலையீடு குறித்த தேர்வுக் குழுவினரை சமூக வலைதளம் மூலம் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பல்வேறு நாடுகளிலும் டிக்டாக் தடை அதிகரித்துவருவதால் பயனாளர்களின் தரவுகளை நிறுவனத்தினர் எடுக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டிக்டாக் நிறுவனத்தின் உரிமையாளர், தரவுகள் அனைத்தும் அமெரிக்கா, சிங்காபூரில் உள்ள சர்வர்களில் சேமிக்கப்படும்.
அந்தத் தரவுகள் சீன அரசால் எளிதாகப் பார்க்க முடியும் எனப் பதிலளித்துள்ளார். பயனாளர்களின் தரவுகளை எடுக்க முடியுமா என்று ஜனவரி மாதம் கேட்கையில் அவர், எந்த பொது நெட்வொர்க்கிலும் 100 விழுக்காடு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியிருந்தார். மேலும் டிக்டாக் பயனாளர்கள் தங்களது தொலைபேசியிலிருந்து கணக்கினை டெலிட் செய்தாலோ அல்லது அரசாங்கம் டிக்டாக் செயலியைத் தடை செய்தாலோ, அந்தக் கணக்கின் மூலம் பெறப்பட்ட தரவுகளை டிக்டாக் நிறுவனத்தின் உதவியில்லாமல் யாராலும் அழிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டிக் டாக் தடைனு இனி கவலை வேண்டாம் - வந்தாச்சு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்!