ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா, நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வந்தது. அதனால் ஒரு லட்சத்திற்கும் மேலானோர், வீடுகளை விட்டு வெளியேறினர். பல லட்சக்கணக்கான விலங்கினங்கள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தீயில் கருகின. சுமார் 16 மில்லியன் ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசமாகின. அப்போது மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 33 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியா தீ - நிதி திரட்ட 103 மீட்டர் நீளமுள்ள பீட்சா - ஆஸ்திரேலியா தீ
கான்பெரா: ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்ட 'இத்தாலியன்' என்ற உணவகம் 103 மீட்டர் நீளமுள்ள பீட்சாவை தயாரித்துள்ளது.

australia-fire
இந்நிலையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஆஸ்திரேலியாவின் இத்தாலியன் என்ற உணவகம் 103 மீட்டர் (338 அடி) நீளமுள்ள பீட்சாவை தயாரித்துள்ளது. அதில் 4 ஆயிரம் துண்டு பீட்சாக்கள் அடங்கும். இதுகுறித்து அந்த உணவகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:தென் கொரியாவில் தலைதூக்கும் கொரோனா - மேலும் 142 பேர் பாதிப்பு