பருவ நிலை மாற்றம், காற்று மாசு என பல்வேறு காரணங்களால் பசிபிக் நாடான ஆஸ்திரேலியாவில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் நேற்று வரலாறு காணாத அளவிற்கு வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சராசரியாக 40.9 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதவிவாகியுள்ளது. இதன் மூலம், 2013 ஜனவரி 7ஆம் தேதி அன்று பதிவான 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை விஞ்சியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வெப்பமான நாள் ஆஸ்திரேலியாவின் குயிஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பெர்ஸ்வில் நகரத்தில் வெப்பநிலை 47.7 டிகிரியும், மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில் உள்ள மன்டோரா நகரில் 46.7 டிகிரியும் நிலவியது.
அதிகரித்து வரும் வெப்ப நிலை, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்திரேலிய காட்டுத் தீயை மேலும் பரவச்செய்கிறது. காட்டுத் தீயால் ஏற்படும் புகை, வெப்பத்தினால் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சுமார் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், சிட்னி நகர் அருகே எரிந்து வரும் காஸ்பர்ஸ் மவுண்டெயின் காட்டுத் தீ அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: எங்களது ஆதரவு NRC-க்கு கிடையாது - ஒடிசா முதலமைச்சர்