இது குறித்து அந்த ஆய்வின் தலைவர் டேவிட் லின்டென்மேயர் கூறுகையில், "கடந்த 25 ஆண்டுகளாக நடந்த காட்டுத் தீ சம்பவங்களின் அளவு குறித்து ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வீக்டோரியா மாகாணத்தில் ஏற்படும் காட்டுத் தீயின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2000ஆம் ஆண்டுக்கு முன்பு, 150 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகே, பெரும் காட்டுத் தீ சம்பவம் நடந்துள்ளது. ஆனால், 2000ஆம் ஆண்டு பிறகு அதுபோன்று மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்து பற்றிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. அதுவும் 5 அல்லது 6 ஆண்டுகள் இடைவெளிக்குள்ளாகவே இது நடக்கிறது.
ஆகையால், காட்டுத் தீ சம்பவங்கள் அரிதாக நடக்கும் என்ற காலம் மலையேறி, அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் நடப்பதையே தரவுகள் கூறுகின்றன" என்றார்.
2019-20இல் நடந்த 'பிளாக் சம்மர்' தேசிய காட்டுத் தீ பேரிடரில் விக்டோரியா மாகாணத்தில் 15 லட்சம் ஹெக்டேர் காடுகள் தீக்கிரையானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காட்டுத் தீ சம்பவத்தில் 33 பேர் தங்கள் உயிரை இழந்தனர். மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின. 1939ஆம் ஆண்டுக்கு பிறகு விக்டோரியாவில் ஏற்பட்ட மிகப் பெரும் காட்டுத் தீ இதுவாகும்.
தீக்கிரையான இந்த 15 லட்சம் ஹெக்டேர் காடுகளில், 1995ஆம் ஆண்டுக்கு பிறகு ஆறு லட்சம் ஹெக்டேர்கள் இரண்டு முறையும், ஒரு லட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேர்கள் மூன்று முறையும் தீக்கிரையாகியுள்ளன. இதுபோன்று அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ சம்பவங்களால் சுற்றுச்சூழல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது பாதிக்கப்படுவதாக கவலைத் தெரிவிக்கிறார் லின்டெல்மேயர்.
இதையும் படிங்க : அலுவலகத்தை அவசியமின்றி பூட்டவேண்டாம்: கரோனா வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு