தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா தடுப்புமருந்து உற்பத்தியை தொடங்கிய ஆஸ்திரேலியா!

சிட்னி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்புமருந்தின் உற்பத்தியை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.

Oxford-developed Covid-19 vaccine
Oxford-developed Covid-19 vaccine

By

Published : Nov 9, 2020, 4:32 PM IST

உலகெங்கும் 50 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கரோனாவுக்கு தடுப்புமருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். அதில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்புமருந்தின் மீதான எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகமாக உள்ளது.

தற்போதுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு தடுப்புமருந்திற்கு ஒப்புதல் கிடைக்கும் முன்னரே, பல்வேறு நிறுவனங்களும் மருந்தை உற்பத்தி செய்யும் பணிகளை தொடங்கிவிட்டன. அதன்படி ஆஸ்திரேலியாவிலும் கரோனா தடுப்புமருந்து உற்பத்தி செய்யும் பணிகளை அந்நாட்டின் சிஎஸ்எல் நிறுவனம் தொடங்கியுள்ளது.

உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டாலும்கூட, மருந்திற்கு அந்நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கும்வரை அது பயன்பாட்டிற்கு வராது என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரவலாக மாறிய ட்ரம்பின் தேர்தல் நைட் பார்ட்டி!

ABOUT THE AUTHOR

...view details