தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காபூல் விமான நிலையத்தில் 40 பேர் மரணம் - காபூல் விமான நிலையத்தில் இதுவரை 40 பேர் மரணம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் கடந்த மூன்று நாள்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் தெரிவித்துள்ளது.

Kabul airport
Kabul airport

By

Published : Aug 18, 2021, 4:54 PM IST

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த சில நாள்களாகவே அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலுக்குள் நுழைந்த தாலிபான்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரஃப் கானி தனி விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார்.

காபூல் விமான நிலையத்தில் குழப்பம்

காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய பின் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள், தூதர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்கா தனது வீரர்களையும் தூதரக அலுவலர்களையும் விமானப்படை விமானம் மூலம் மீட்ட நிலையில், அந்த விமானத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலர் தொத்திக்கொண்டு சென்ற நிலையில், அவர்கள் நடுவானில் விமானம் சென்றபோது விழுந்து உயிரிழந்தனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பலர், விமான நிலையத்தை முற்றுகையிட்டு நாட்டை விட்டு வெளியேற முயற்சி தொடர்ந்து செய்து வருகின்றர். இதன் காரணமாக காபூல் விமான நிலையம் போர்களம் போல் காட்சியளிக்கிறது.

தாலிபான் தளபதி அறிவிப்பு

இந்த மூன்று நாள்களில் மட்டும் கூட்ட நெரிசல் மற்றும் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் தளபதி மொஹிபுல்லா ஹேக்மத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வெளிநாட்டவர்கள் விமானங்களில் ஆப்கானிஸ்தான்கள் தொங்கிக்கொண்டு செல்லக்கூடாது. அவர்கள் தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது" என்றார்.

இதையும் படிங்க:ஆப்கானிஸ்தான் அதிபர் நானே- அம்ருல்லா சலே!

ABOUT THE AUTHOR

...view details