காபூல்:மேற்கு ஆப்கானிஸ்தானில் திங்களன்று(ஜன.16) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் துர்க்மெனிஸ்தான் எல்லையில் உள்ள பட்கிஸ் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மீண்டும் 4.9 ரிக்டர் அளவு கோளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு - மேற்கு ஆப்கானிஸ்தானில் இரண்டு முறை நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் 26 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதன்காரணாக 700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஐந்து பெண்கள், நான்கு குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களில் பலர் உயிரிழந்திருக்காலம் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் சேதம் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. சில நாள்களுக்கு முன்பு அருணாசல பிரதேசம், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்