தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் 150 வீடுகள் எரிந்து சேதம் -  2 நபர்கள் உயிரிழப்பு!

கான்பெரா: ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் 150 வீடுகள் எரிந்து நாசமடைந்ததுடன், 2 நபர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா காட்டுத்தீயில் 150 வீடுகள் எரிந்து நாசம்

By

Published : Nov 9, 2019, 5:40 PM IST

ஆஸ்திரேலிய காட்டுத் தீ தற்போது அடுத்து உச்சத்தை அடைந்துள்ளது. இதற்கு முன்பு, காட்டுத் தீயில் குறைந்தது 100 வீடுகள் எரிந்து நாசமானதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்பு சேவை அமைப்பினர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது

அதில், "நியூ சவுத் வேல்ஸ் காட்டுத் தீ விபத்தில் குறைந்தது 150 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. எங்கள் கட்டடத் தாக்கம் மதிப்பீட்டுக் குழுக்கள் இன்னும் சிலப் பகுதிகளை அடைய முயன்று வருகின்றன. மேலும் 2 பேர் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீ, புகை ஆபத்துகள் காரணமாக, குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திரும்புவதற்குச் சிறிது நேரம் ஆகும்" எனப் பதிவிட்டனர்.

கடந்த வாரத்திலிருந்து நியூ சவுத் வேல்ஸ் , குயின்ஸ்லாந்து பகுதி முழுவதும் காட்டுத் தீ தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகள் எரிக்கப்பட்டுள்ளன. மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் கோலாக்கள் உட்பட நூற்றுக்கணக்கான விலங்குகளின் உயிர் வாழும் வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் குறைந்து வருவதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் 150 வீடுகள் எரிந்து நாசம்

இதையும் படிங்க: பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நாள் - கூகுள் டூடுல் நினைவூட்டும் அதன் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details