தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

போருக்குத் தயாராகுங்கள்: சீன அதிபர் பரபரப்பு கருத்து - சீனா அதிபர் ஜீ ஜிங்பிங் கருத்து

பெய்ஜிங்: இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், சீன ராணுவம் போருக்கு தயாராக வேண்டும் என்ற கோணத்தில் பரபரப்பு கருத்தை அதிபர் ஜீ ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

as-tension-escalates-with-india-xi-asks-pla-to-step-up-war-preparedness
as-tension-escalates-with-india-xi-asks-pla-to-step-up-war-preparedness

By

Published : May 28, 2020, 9:51 AM IST

கரோனா வைரஸ் பாதிப்புகள் சீனாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தில் இவ்விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சீன அதிபர் ஜீ ஜிங் பிங் பேசுகையில், ''சூழலை அறிவியல்பூர்வமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ராணுவ நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளைத் தொடங்கவும், ராணுவ வீரர்களின் திறனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

சீன அதிபரின் இந்த கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் உரசிக்கொள்ளும் நிலையில், சீன அதிபர் கருத்து வெளியானது இந்திய தரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முப்படைத் தலைமைத் தளபதியுடன், இந்திய ராணுவத் தளபதிகள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கலந்துகொண்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வரைபட விவகாரம் பின்வாங்கிய நேபாளம்

ABOUT THE AUTHOR

...view details