அர்மேனியா நாட்டு அதிபர் அர்மென் சர்கிஸியன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென்று அறிவித்துள்ளார். தனது பதவிக்கு தேவையான அதிகாரம் வழங்கப்படவில்லை எனக் காரணம் காட்டி இந்த முடிவை அவர் மேற்கொண்டார்.
2018ஆம் ஆண்டு அதிபராக சர்கிஸியன் பதவியேற்ற பின் அர்மேனியாவுக்கு அண்டை நாடான அசர்பைஜானுக்கு இடையே போர் ஏற்பட்டது. இதில் அர்மேனியா நாடு பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில், "நாடு மோசமான சூழலை சந்தித்துவரும் வேளையில், அதிபருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை வகுப்பதில் எந்த பங்கும் இல்லை என்பது வருந்தத்தக்கது.