தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பணத்தில் புரளும் பயங்கரவாதிகள்... சர்வதேச சிக்கலில் பாகிஸ்தான்...! - மும்பை தாக்குதல் ஹபீஸ் சயீத்

டெல்லி: மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் உள்ளிட்ட பயங்கரவாதிகள், பயங்கரவாத இயக்கங்கள்  மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆசிய பசிபிக் குழுவின் நிதி கண்காணிப்பு நடவடிக்கை பணிக்குழு கூறியுள்ளது.

Hafees Saeed

By

Published : Oct 7, 2019, 1:32 PM IST

பயங்கரவாத அமைப்புகள்

பாகிஸ்தானிலிருந்து தேஷ், அல்கொய்தா, ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா, ஹக்கானி நெட்வொர்க் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன.

இந்த பயங்கரவாத குழுக்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து நிதி உதவி கிடைக்கிறது என்றும் இதனை தடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிதி திரட்டல்

இந்த நிலையில், 21/11 (2008) மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத், அவரது இயக்கம் மீதும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காததை ஆசிய பசிபிக் குழுவின் நிதி கண்காணிப்பு நடவடிக்கை பணிக்குழு (inancial action task force) சுட்டிக் காட்டியுள்ளது.

அதில், ”பாகிஸ்தானில் இருந்தபடி செயல்படும், தடைசெய்யப்பட்ட கறுப்பு பட்டியலில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு சட்டவிரேத பணப்பரிவர்த்தனை கிடைக்கிறது. இதனைத் தடுக்க அந்நாட்டு அரசு குறிப்பிட்டு சொல்லும்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு பணம் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னடைவு

ஆசிய பசிபிக் குழுவின் இந்த அறிக்கை, பாகிஸ்தான் அரசுக்குப் பின்டைவாகக் கருதப்படுகிறது. ஏனெனில், கடந்தாண்டு (2018) பயங்கரவாதிகளின் கைகளில் புரளும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மீது நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச பணப்பரிமாற்ற கண்காணிப்புக் குழு பாகிஸ்தானை அறிவுறுத்தியிருந்தது.

இதற்கு 15 மாத கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் அடுத்த மதிப்பாய்வுக் கூட்டம், வருகிற 13, 18ஆம் தேதிகளில் பாரிசில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
குஜராத் கடற்கரையில் பாகிஸ்தான் படகு சிக்கியது? பயங்கரவாதிகள் ஊடுருவலா?

'பயங்கரவாதி ஹஃபிஸ் கைது குறித்து ட்ரம்ப் ட்வீட்'

ABOUT THE AUTHOR

...view details