சீனாவின் வுகான் மாகாணத்தில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகையால் இங்குள்ள வெளிநாட்டினர் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர்.
ஜப்பான் அரசும் சுகாதார அவசரநிலையை அறிவித்து சீனாவில் சிக்கியுள்ள ஜப்பானியர்களை மீட்டுவருகிறது. அந்த வகையில் ஹாங்காங்கிலிருந்து 273 ஜப்பானியர்கள் விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 25 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. தற்போது அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.