தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

12 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சையளித்த மருத்துவரை மறக்காத யானை!

பாங்காக்: காட்டு யானை ஒன்று, 12 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சிகிச்சையளித்த கால்நடை மருத்துவரை மனதைக் கவரும் தருணத்தில் அடையாளம் கண்டுள்ளது.

elephant recovery
12 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சையளித்த மருத்துவரை மறக்காத யானை

By

Published : Mar 19, 2021, 8:45 AM IST

காட்டு யானை ஒன்று 12 ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு சிகிச்சையளித்த கால்நடை மருத்துவரை அடையாளம் கண்டுள்ளது. அவரை எதிர்பாராதவிதமாக பார்த்தவுடன் அவரது கையைத் தொட்டு மகிழ்ந்துள்ளது.

இந்த யானை 2009ஆம் ஆண்டில், கிழக்கு தாய்லாந்தின் ராயோங் வனப்பகுதியில் போராடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது டிரிபனோசோமியாசிஸ் எனும் ஆபத்தான நோயால் பாதிக்கப்படிருந்தது. இந்நோய் ஒரு ஒட்டுண்ணி நிலை என்றும் தூக்க நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் காய்ச்சல், பசியின்மை, முகம், கழுத்து, வயிற்றில் வீக்கம் ஆகியவற்றுடன் சண்டையிட்ட யானைக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் பட்டரபோல் அப்போது வந்திருந்தார்.

அப்போது யானையின் கண்கள் வீங்கியும், கடினமான கால்கள், முதுகு, இரத்த சோகை ஆகியவற்றாலும் அது அவதிப்பட்டு வந்தது. தொடர்ந்து வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறையின் ஊழியர்களால், சிகிச்சைக்காக, லம்பாங் மாகாணத்தில் உள்ள வனத்தொழில் அமைப்பின் பகுதிக்குயானை கொண்டு செல்லப்பட்டது.

12 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சையளித்த மருத்துவரை மறக்காத யானை

யானை குணமடைந்த பின்னர் பல மாதங்கள் கழித்து விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாதத் தொடக்கத்தில், 12 ஆண்டுகளுக்கு முன்பு தான் சந்தித்த யானையின் தனித்துவமான ஒலியை மருத்துவர் பட்டரபோல் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது உணர்ந்துள்ளார். அப்போது மருத்துவர் பட்டரபோலை வாழ்த்துவதற்காக தனது உடற்பகுதியை அசைத்து, அவரை யானை அழைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அந்த யானை அவரை சந்தித்துள்ளது.

இது குறித்து மருத்துவர் பேசுகையில் “யானையின் சத்தம் மிகவும் தெளிவாக எனக்கு நினைவிருக்கிறது. இதன் சத்தம் மிகவும் தனித்துவமானது. நாங்கள் முதலில் சந்தித்தபோது யானை மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அதன் உடல் பலவீனமாக இருந்ததால் அதனால் மற்ற யானைகளுடன் போராட முடியவில்லை. அது குணமடைய நீண்ட நேரம் பிடித்தது, ஆனால் அது மிகவும் புத்திசாலி. தன்னை கவனித்துக் கொண்டது என்று நாங்கள் அறிந்தோம். சமீபத்தில், நாங்கள் மீண்டும் சந்தித்தோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்த்தினோம். இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம். யானைகளுடன் மக்கள் செய்யும் வேலையைப் பாராட்ட, இது அனைவரையும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

தாய்லாந்து நாட்டில் 3,000 முதல் 4,000 வரை யானைகள் வாழ்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில், குறைந்தது பாதி யானைகள் இயற்கை இருப்புக்களில் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 989 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details